கோறளைப்பற்று மத்தியில் இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | 03 ஜூன் 2026

கோறளைப்பற்று மத்தியில் இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | 03 ஜூன் 2026பிரதேச மட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் நலன் தொடர்பாக சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டு பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் 03 ஜூன் 2026 காலை 9.30 மணிக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், சமுர்த்தி முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம். தாஹிர், மாவட்ட சிறுவர் உரிமைகள் உத்தியோகத்தர் ரீ. மதிராஜ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பி. மகேந்திரன், சிறுவர் உரிமைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர். தாஸிம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சர்ஜுன், உளவளத் துணை ஆலோசகர் எஸ். விக்கினேஸ்வரி, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.எம். நெளபர் ஆகியோரும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பாடசாலை இடைவிலகல், மாணவர் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வரவு மேம்பாடு மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் முழுமையான அபிவிருத்தியை உறுதிப்படுத்த பல்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கான அனுசரணையை 'ஸெரி' நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

02 ஜூன் 2026புனாணை கிழக்கு AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு | 02 ஜூன் 2026"வளமான நாடு – அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தியின் "ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்" திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புனாணை கிழக்கு ரிதிதென்ன பிரதேசத்தின் AC-67 விவசாய வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 02 ஜூன் 2026 அன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன் ஹாஜியார், புனாணை கிழக்கு பிரஜாசக்தி தலைவர் ஐ.எல். சமட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெலிக்கந்த மகாவலி வதிவிடத்திட்ட முகாமையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ரிதிதென்ன விவசாய அமைப்பு உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு சிறி மஹிந்தாராம் விகாரையில் சிரமதானப் பணி | 02 ஜூன் 2026

வெசாக் வாரத்தை முன்னிட்டு சிறி மஹிந்தாராம் விகாரையில் சிரமதானப் பணி | 02 ஜூன் 2026வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் முன்னெடுப்பில், வெசாக் வாரத்தை முன்னிட்டு தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலங்கரச்சை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறி மஹிந்தாராம் விகாரை வளாகத்தில் சிரமதானப் பணி 02 ஜூன் 2026 அன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன், கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கான Clean Sri Lanka இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். சமீம், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சி. நியாஸ்தீன், தியாவட்டவான் 210C பிரஜாசக்தி தலைவர் எம்.பி. பெளருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சிரமதானப் பணியில் பங்கேற்றனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "பொதுத்தூய்மை குப்பைக் கூளம் அகற்றல்" தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. "சுத்தமான சூழல் – ஆரோக்கியமான வாழ்க்கை" என்ற இலக்கை அடைவதற்காக அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

News & Events

18
අගෝ2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
අගෝ2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

Scroll To Top