Service Cluster of Divisional Secretariat
Civil Registrations
Issuance of Permits
Issuing of Certificates
Payment of Pensions
Land Administration
Social Welfare and Benefits
Procurements
Development Program
Find the services we provide...
Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.
Contact UsNews & Events
Government Service Centers
Home
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் - 09.08.2026 பிற்பகல் 4 மணியளவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
30க்கும் அதிகமான பிரதேச பல்துறை கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்
இவ் வருடம் நடைபெறவுள்ள இலக்கிய விழா, "வாழை மடல் " மலர் வெளியீடு , மாதாந்தம் கலை நிகழ்வுகளை நடத்துதல் என்பன தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும் கலாசார பேரவை மற்றும் அதிகார சபைக்கான தெரிவும் இடம் பெற்றது
“அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முன்ஆயத்த கலந்துரையாடல் | 07.08.2026
“அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் முன்ஆயத்த கலந்துரையாடல்
க்ளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் “தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்ஆயத்த கலந்துரையாடல் நேற்று (06) வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி ரன்விமன பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல் | 31.07.2026
கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி ரன்விமன பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்
"கலைஞர் சுவதம்" வேலைத் திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு | 22.07.2026
"கலைஞர் சுவதம்" வேலைத் திட்டத்தின் கீழ் மூத்த கலைஞர்கள் கௌரவிப்பு
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்" திட்டத்தின் கீழ், மூத்த கலைஞர்களைக் கௌரவித்து உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (22) புதன்கிழமை இடம்பெற்றது.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் திறமையான கலைஞர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களைச் சந்தித்து கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இம்முறை கெளரவிப்பதற்காக பெயரிடப்பட்ட நால்வரில் முதற்கட்டமாக வாழைச்சேனை-04, வை.எம்.எம்.ஏ.குறுக்கு வீதியில் வசிக்கும் ஏ.எச்.ஹுஸைன், மற்றும் வாழைச்சேனை-04, கொமைனி வீதியில் வசித்துவரும் யூ.அஹமட் (அதிபர்) ஆகியோரும் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.























